இருபது மதங்களில் வருவதாய் சொல்லி போனாய்
இரண்டு வருடம் கடந்து நிற்கிறது நாட்கட்டி
அயல் நாட்டில நீ அடைந்து கிடக்க காரணம்
அரபி வைத்த கட்டுப்பாட ........... இல்லை
கத்தை யாய் கட்டி போடும் பணமா???
அந்த கத்தை நோட்டுகளில்
சிறிதேனும் தெரிகிறதா
என் மடியில் புரண்டு ஓடும்
நாம் மகனின் பால் நிலா முகம்.....
நீண்ட தொலைபேசி அழைப்புகளை
ஓடி வந்து எடுக்கிறேன்
உன் மூச்சு காற்றாவது
கேட்டு விடாதா என
"சூறாவளி காற்று வீசியது" என
செய்தி கேட்டாலே செத்து போகிறது இதயம்
நீ நலம் என அறியும் வரை
அகண்ட சமுதாய விழிகளில் தப்ப
வீட்டில் வருவோரை எல்லாம்
ஜன்னல் வழியாகவே பேசி
அனுப்பி விடுகிறேன் இப்போது எல்லாம்
அழைப்பு மணியின் ஓசை கேட்டு
ஓடிவந்தால் கதவு அருகே நீ
ஆசை யோடு உன்னை கட்டி அணைக்க
ஆறாவது அறிவு சொன்னது கனவு என்று
கையில் இருக்கும் தலையனை உதறி
மீண்டும்
புரண்டு புரண்டு படுகிறேன்
அறை முழுதும் பரவி கிடக்கும்
உன் நினைவலைகளோடு.......
இரண்டு வருடம் கடந்து நிற்கிறது நாட்கட்டி
அயல் நாட்டில நீ அடைந்து கிடக்க காரணம்
அரபி வைத்த கட்டுப்பாட ........... இல்லை
கத்தை யாய் கட்டி போடும் பணமா???
அந்த கத்தை நோட்டுகளில்
சிறிதேனும் தெரிகிறதா
என் மடியில் புரண்டு ஓடும்
நாம் மகனின் பால் நிலா முகம்.....
நீண்ட தொலைபேசி அழைப்புகளை
ஓடி வந்து எடுக்கிறேன்
உன் மூச்சு காற்றாவது
கேட்டு விடாதா என
"சூறாவளி காற்று வீசியது" என
செய்தி கேட்டாலே செத்து போகிறது இதயம்
நீ நலம் என அறியும் வரை
அகண்ட சமுதாய விழிகளில் தப்ப
வீட்டில் வருவோரை எல்லாம்
ஜன்னல் வழியாகவே பேசி
அனுப்பி விடுகிறேன் இப்போது எல்லாம்
அழைப்பு மணியின் ஓசை கேட்டு
ஓடிவந்தால் கதவு அருகே நீ
ஆசை யோடு உன்னை கட்டி அணைக்க
ஆறாவது அறிவு சொன்னது கனவு என்று
கையில் இருக்கும் தலையனை உதறி
மீண்டும்
புரண்டு புரண்டு படுகிறேன்
அறை முழுதும் பரவி கிடக்கும்
உன் நினைவலைகளோடு.......
No comments:
Post a Comment