Friday, August 7, 2009

தோழர் முரளி ( 25.05.1954 - 6.08.2009)


மலையாள திரை உலகின் இன்னொரு குறிஞ்சிப் பூவும் உதிர்ந்திருக்கிறது. குணசித்திர வேடங்களில் தனித்துவமான கதாப்பாத்திரங்களில் வாழ்ந்து மறைந்திருக்கிறது ஒரு துருவ நட்சத்திரம். அவர் தோழர் முரளி.

1954- ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்து, மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -ன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்று, சட்டம் பயின்று, கேரள அரசு ஊழியராகி, "சிதம்பரம்" என்ற சினிமாவில் அறிமுகமாகி, "நெய்த்துகாரன்" திரைப் படத்திற்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று மலையாளம், தமிழ் என சுமார் 300 திரைப்படங்களில் நடித்து மார்க்ஸிஸ்ட் கட்சியின் பெரும் ஆதரவாளராய் இருந்து பெருமை மிகு கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் இருந்து ஒய்ந்திருக்கிறான் இந்த கலைஞன்..

எந்த வேடமானாலும் தன் உடல் அசைவுகளாலும், முகப் பாவங்களாலும் சாதாரண சினிமா பார்வையாளனையும் கட்டி போட்டவர் முரளி. கதையின் நாயகனாக அவர் நடித்த "ஆகாச தூது" திரைப்படம் மலையாள திரை உலகின் முக்கியமான திரைப்படம். "நெய்த்துகாரன்" அவருடைய கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வெற்றி மாறன் (பொல்லாதவன்), சரண்(ஜெமினி) போன்றோர் மட்டுமே இவரை சிறப்பாய் பயன் படுத்தினர்.

ஏராளமான மாநில அரசு விருதுகளையும், மத்திய அரசு விருதினையும் பெற்ற முரளியின் மரணம் மலையாள கலை உலகிற்க்கும், மார்க்ஸிஸ்ட் காட்சிக்கும் பெரும் இழப்பே.

பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாத கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

2 comments:

  1. ஜெமினி உள்ளிட்ட சில படங்களில் அவரது உடலசைவுகளில் தென்படும் ஆளுமைகளைப் பார்த்து வியந்துள்ளேன். அருமையான நடிகர்...

    ReplyDelete
  2. முக்கியமான விஷயத்தை மறந்து விட்டீர்கள்.ராஜேஷின் பின்னணி குரல் முரளிக்கு அவ்வளவு கச்சிதமாய் பொருந்தியது.

    ReplyDelete