Friday, February 27, 2009

முத்துக்குமரனுக்கு வீர வணக்கம்.....


முத்து குமரனே.......
நீ மண்ணில்
புதைக்கப்பட்டாய் என்பதை விட
எம் நெஞ்சில்
விதைக்கப்பட்டாய் என்பதே நிஜம்........

உன் எரிந்த உடலை கூட
துருப்பு சீட்டு ஆக்கியவனே
அனலாய் கொதிக்கிறது
ஆறு கோடி இதயம்
நீ கொளுத்திய
ஒரே பொறியால்............

இன்று நீறு பூத்து நிற்கும்
நம் இளைஞர் படை
வீறு கொண்டு வேங்கையாகும் நாளில்
கடல் கூட தாங்காது
இல்லாமல் போகும் இலங்கை படை.........

உன் சம கால நூற்றாண்டில் யாம்
வாழ்த்தோம் என்பதே
நாளைய சரித்திரத்தில் நாம்
பேசிக் கொள்ளும் பெருமை.....

வீரனே.... யாம் இருக்கும் நாள் வரை
உன் நினைவுகள் எம்மோடு இருக்கும்...
யாம் இல்லாத நாளில்
நாம் உன்னோடு இருப்போம்.....

அறுதிட்டு சொல்கிறோம்...........
ராமன் வாழ்ந்த தேசம் தாண்டி
ராவணன் வாழ்ந்த தேசத்தில் - ஏதோ
ஓர் ஈழ தாயின் கருவறையில்
இன்று உதித்திருப்பாய் - நாளை
நடக்கும் புனித போருக்காய்!!!!!!!!!!!!!

1 comment:

  1. //ஓர் ஈழ தாயின் கருவறையில்
    இன்று உதித்திருப்பாய் - நாளை
    நடக்கும் புனித போருக்காய்//

    wont it be ..
    ஓர் thamil-ஈழ தாயின் கருவறையில்
    இன்று உதித்திருப்பாய் - நாளை
    நடக்கும் புனித போருக்காய்
    ??

    ReplyDelete