Sunday, August 9, 2009

ஒரு நட்பின் தேடல்......



http://youthful.vikatan.com/youth/stalinpoem10082009.asp

என்னால் அனுப்பப்படும்
எல்லா குறுஞ்செய்திகளும்
இடம் அறியாமல்
மரணித்து விடுவதை
உன் அலைப்பேசியின்
மவுனம் உணர்த்துகிறது.............

உன் பிரத்யேக தொலைபேசியின்
விடையில்லா மணியோசைக்கு
பின்வரும் பதிவு செய்யப்பட்ட
பெண்ணின் குரலும்
பரவசத்தை தவிர்த்து
பயத்தையே தருகிறது............

அடுக்கப்பட்ட நாட்குறிப்பேடுகளில்
தேடி எடுத்து அனுப்பிய
உனக்கான மின்னஞ்சலும்
பாதி வழியிலேயே
குற்றுயிராகி திரும்பி விடுகிறது.........

நம் இருவருக்குமான பிரழாத
நினைவுகள் முட்டி சாய்க்க
விழி மீதிருந்து
பிரிந்தோடிய கண்ணீர்
மார்‌பெங்கும் படர்ந்தேகி
அணை கட்டி நிற்கிறது
மொழியற்ற வலியின் கவிதையாய்......

6 comments:

  1. poin out panni solla mudelenga intha poem pathi. enna ovvoru lines me romba adarthiya, aazhama irukku. romba nalla irukku.

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி கவி

    ReplyDelete
  3. Cell Not Reachable, Phone Out of order , Mail Delivery Failures
    தமிழ்படுத்திய விதம் அருமை !!!!!!

    நிறைய எழுதுங்கள் !!!!!
    வாழ்த்துக்கள் !!!!!

    ReplyDelete
  4. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி அருண்

    ReplyDelete
  5. aazham niraintha karu unadhu kavidhai. thamillakkam arumai. umadhu thamizhukkum nadaikkum naan visiriaagivittaen. umadhu kavidhaigal puthaga vadivil kidaikkaperuma nanbare?

    ReplyDelete
  6. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி விர்ஜின்

    ReplyDelete