Monday, January 31, 2011

கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் - புத்தக வெளியீட்டு விழா


எழுத்தாளர் எச். பீர் முகம்மது குறித்து அறிமுகம் தேவையில்லை. மத்திய கிழக்கு சமூக அமைப்பு முறைகளை பெருவாரியான தமிழ் இலக்கிய வாசகர்களிடம் கொண்டு சேர்த்தவர். குறிப்பாக நோம் சாம்ஸ்கியை அவர் கண்ட நேர்காணல் இலக்கிய உலகை பரபரப்பாக்கிய நிகழ்வுகளில் ஒன்று.

மத்திய கிழக்கு சிந்தனையாளர்கள் சிலருடன் அவர் கண்ட நேர்காணல்கள், அவர்களைப்பற்றிய அறிமுகம் மற்றும் அவர்களின் கோட்பாடுகளை உள்ளடக்கி, அடையாளம் பதிப்பகத்தின் சார்பில் 'கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்' என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.

இப்புத்தகத்தின் வெளியீட்டு விழா வரும் 5ம் தேதி சனிக்கிழமை நாகர்கோவிலில் வைத்து நடைபெறுகின்றது. நண்பர்களும், இலக்கிய விமர்சகர்களும் பெருவாரியாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இலைகள் இலக்கிய இயக்கம் நடத்தும்

எச்.பீர்முஹம்மதின் "கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்" (அடையாளம் பதிப்பகம்)

நூல் வெளியீடு

இடம்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க கட்டிடம் (TEMA house)செட்டிக்குளம் ஜங்ஷன் நாகர்கோவில்

நாள்: 05-02-2011 சனிக்கிழமை மாலை 5 மணி

தலைமை: கொடிக்கால் ஷேக் அப்துல்லா

நூல் வெளியீடு: எழுத்தாளர் பொன்னீலன்

முதல்பிரதியை பெற்றுக்கொள்பவர்: கவிஞர் என்.டி. ராஜ்குமார்

கருத்துரையாளர்கள்: பேராசிரியர் முத்துமோகன்


கவிஞர் சுகுமாரன்

ஏற்புரை : எச்.பீர்முஹம்மது

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர் : ஹசன் மைதீன் (இலைகள் இலக்கிய இயக்கம்)

தொடர்புக்கு 9894079722, 8973331660.

2 comments:

  1. நல்ல செய்தி உளம் கனிந்த பராட்டுகள் வெகு தூரம் என்பதால் எம்மால் கலந்து கொள்ள இயலாது செய்திகளுக்கு நன்றி

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி போளூர் தயாநிதி

    ReplyDelete