பெரும் மழைக்கு
பின் வந்த ஒரு
கல்லூரி விடுமுறை நாளில்
என் அபிமான நாயகனை போல்
மாட்டி கொண்டேன்
சிறு வளையம் ஒன்றை
இடது காதோரமாய்...
நான்காம் பருவத்தின்
முதல் நாளில்
அதை பார்த்த
கல்லூரி தோழன் ஒருவன்
'கலாசார சீரழிவு' என்றும்
'கலிகாலம்' என்றும்
தன் போதை தீரும் அளவு
திட்டி தீர்த்தான்....
நேற்றைக்கு முந்தினம்
என் ரயில் பயணத்தில்
சற்றே வெள்ளை ஆப்பிள்
நிறத்தில் இருந்த
பெண் ஒருத்தியின் தொப்பிளின்
வல பக்கமாகவும்
இட பக்கமாகவும்
தொங்க விடப்பட்டிருந்த
வளையத்தை பார்த்து
அநியாயத்துக்கு ஞாபகத்தில்
வந்து போனான்
என் அருமை சிநேகிதன்....
கடைசி மூன்று வரிகளை நம் கற்பனைக்கே விட்டு சிரிக்க வைத்த கவிஞரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை...
ReplyDeleteவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா
ReplyDeletenice man
ReplyDeletekeep it up
வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி டாக்டர் அசோக்
ReplyDeletevayasu illai rasikka
ReplyDeletevayasu illai rasikka
ReplyDelete