Wednesday, February 24, 2010

அஜித்குமார் என்ற ஆண்மகன்

இந்த பதிவை எழுதுவதால், நான் அஜித்தின் தீவிர ரசிகன் என்றோ, அவருடைய மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினன் என்றோ தவறாக எண்ணி விட வேண்டாம். அஜித்தின் ஒரு சில திரைப்படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கிறது என நண்பர்கள் சொன்னால் மட்டும்.... இருப்பினும் கடந்த சில வாரங்களாக அஜித்தை மையம் கொண்டு சுழலும் சர்ச்சைகளே இந்த பதிவினை எழுத தூண்டியது...

'தமிழ்நாடு மன்னராட்சி காலத்தில் தான் இருக்கிறதா ?' என சில நேரம் தோன்றி விடுகிறது. ஏனென்றால் மன்னராட்சி காலத்தில் தான் பெரும்பாலும் கருத்துரிமை பறிக்கப்பட்டிருக்கும்.. அரசனை சுற்றி இருக்கும் மங்குணி அமைச்சர்கள் எடுபிடியாகவே இருப்பார்கள்.... அரசனுக்கு அசதி ஏற்ப்பட்டால் அதை போக்க அரசவை கவிஞர்கள் வேறு....இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா....( இந்த எக்ஸட்ரா எக்ஸட்ரா-வில் அந்தபுரம் உண்டா என கேட்காதீர்கள் )

இந்த 2010 ஆண்டில் 700 கோடி மக்கள் தொகையை தாண்டி உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது...இன்றும் தமிழகத்தில் தனது பதவியை தக்க வைத்து கொள்ள அரசர் காலத்தை விட மோசமான சுயநல அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது... தன் இன மக்கள் சுமார் 10 மைல்களுக்கு அப்பால் கொல்லப்பட்ட வேளையில் அறிக்கை மட்டுமே விட்டு விட்டு குளுகுளு இடங்களில் ஓய்வும், மாலை நேரங்களில் சினிமா பதுமைகளின் நடனமும் மட்டுமே இந்த அதிகார மையங்களுக்கு தேவைப்பட்டது..இனத்திற்காக தங்களும் ஏதோ செய்தோம் என்று காட்ட உண்ணாவிரத நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன....

ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி இருக்க வேண்டும்??? அதுவும் வயதை கடந்த ஒரு முதியவரிடம் எப்படிப்பட்ட பக்குவத்தை நாம் எதிர்பார்ப்போம்..இந்த நாட்டின் எல்லா விருதுகளும், புகழ் மாலைகளும் தனக்கு அப்பாற்பட்டது என்று எண்ணும் குறைந்த பட்ச தகுதி.... ஆனால் தமிழகத்தை ஆளுபவர்களுக்கோ மாதத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கவில்லை என்றால் தானாகவே நடுக்கம் வந்து விடுகிறது போலும்....இதை தவிர்த்து எல்லோரும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நப்பாசை வேறு...

இப்படி சினிமா உலகம் நடத்திய பாராட்டு விழாவில் தான் ஒரே ஒரு குரல் வெளிப்படையாக தன்னுடைய கருத்தினை தமிழகத்தின் முதல் குடிமகனுக்கு முன்னால் பதிவு செய்தது. அதுவும் அவருக்கு எதிராக அல்ல, சினிமா முதலாளிகளுக்கு எதிராக... அந்த குரலுக்கு சொந்தகாரர் திரைப்பட நடிகர் அஜித்.. "பெரும்பாலான விழாக்களுக்கு தங்கள் விருப்பம் இல்லாமல் மிரட்டியே அழைக்கப்படுகிறோம், அரசியல்வாதிகளை பொது பிரச்சச்சனைகளை பார்த்து கொள்ள சொல்லுங்கள், நாங்கள் எங்கள் தொழிலை மட்டும் பார்க்கிறோம்" என்பதே அவருடைய பேச்சின் சாராம்சம்..


மாற்று கருத்து உடையவராக இருந்தாலும், அந்த நபருக்கான கருத்து உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பெரியார்..... பெரியாரின் பெயரை சொல்லி பதவிக்கு வந்த இந்த போலி பகுத்தறிவாளர்களுகோ பயம் ஏற்பட்டு விட்டது.சம்மந்தப்படவர்களை என்னவென்று விசாரித்து நடந்து கொண்டிருக்கும் 'மிரட்டல்' பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலாமல் 'வேறு ஒருவரையே சொன்னாலும், தனக்கு முன் எப்படி சொல்லலாம்' என்ற பாசிச சிந்தனையுடன் பிரச்னையை அணைத்து விட பார்க்காமல் தொடர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.... அதன் தொடர்ச்சியே ஜாகுவார் தங்கம் முதல் திருமா வரை விடும் அறிக்கைகள்....

இது போதாது என்று இனம் மற்றும் ஜாதி பிரச்சனைகளை கொண்டு அஜித்தின் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள், போதாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறது பெப்சி. "மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, வேண்டுமென்றால் நடிப்பதை விட்டு விடுகிறேன்" என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார் அல்டிமேட் ஸ்டார்... அது தான் அஜித். இந்த கலககுரல், இந்த கம்பீரம் தான் இன்று என்னை போன்ற ரசிகன் அல்லாத சினிமா பார்வையாளன் மனதில் அஜித்தை நிரந்தர இடம் பெற செய்திருக்கிறது..

விழா அரங்கிலையே எழுந்து நின்று கைதட்டி தனது பேராதரவை தெரிவித்தார் ரஜினி. 1996 ஆண்டு தேர்தலுக்கு முன்னிருந்தே அவர் என்ன பேசினாலும் சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க முடிவதில்லை.... சூழ்நிலைகளின் கைதி போல் கொந்தளிப்பான மனநிலையில் இருந்த ரஜினி தான் பேச முடியாததை அஜித் பேசியதால் விழா மேடையிலேயே எழுந்து கைதட்டினார்..
ஆனால் அவருக்கும் ஒரு கண்டனத்தை தெரிவித்தது பெப்சி..நடிகர்களுக்கு சமூக அக்கறை வேண்டாமா ? எனபது மட்டுமே எதிர் கோஷ்டியினர் கேட்கும் ஒரே கேள்வி... சமுக அக்கறை என்பது மேடையில் மட்டுமே வீர வசனம் பேசி கைதட்டல் வாங்கி விடுவது என இந்த அறிவிலிகள் நினைத்திருக்கிறார்கள் போலும்..



தொழில் முறையில் சக போட்டியாளராக இருந்தாலும் விஜய் தனது ஆதரவை அஜித்துக்கு தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.அறிக்கை விடாமல் இருந்தாலும் சக நடிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை அஜித்துக்கு தெரிவித்து உள்ளனர்... நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் மொழி, இன பிரச்னை அல்ல.... தன்மான பிரச்சனை... பெப்சிக்கு தம் அமைப்புக்கு எதிராக ஒரு முன்னணி நடிகர் பேசி விட்டாரே என்று.......... முதல்வருக்கோ தன் பாராட்டு விழாவில் ஒரு எதிர் குரல் கேட்டு விட்டதே என்று..

அஜித் கிளப்பிய பொறி இந்த அதிகார மையங்கள் திருந்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்... இல்லையேல் காலம் இவர்களுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்...

புயலாக வந்து எல்லோருடைய மவுனங்களையும் உடைத்த நடிகர் அஜித்துக்கு ஒரு ராயல் சல்யுட்


46 comments:

  1. Well said; I wish the 'young' stars also join Ajit openly and raise voices strongly.

    ReplyDelete
  2. அஜீத் எந்த நிர்பந்தங்களுக்கும் கட்டுப்படாமல் தொடர்ந்து தன் நிலையில் உறுதியாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  3. Ungalayellam padikkum pothu

    konjam nambikai varukirathu.

    ReplyDelete
  4. 'தன்மானப் பிர்ச்சினை’ என்று சொல்லி, அது யாருடையது என்றும் சொல்லிவிட்டீர்கள்: பெப்சியுனடையது.

    அவர்கள் தன்மானத்தைக் காக்க அதைக் கெடுத்தவனிடம் மன்னிப்புக்கேள் என போட்டிபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

    அங்கு உங்களுக்கு என்ன வேலை?

    உங்கள் தன்மானத்திற்கு ஏதாவது பிர்ச்னை வந்ததா?

    ReplyDelete
  5. //இல்லையேல் காலம் இவர்களுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்...
    புயலாக வந்து எல்லோருடைய மவுனங்களையும் உடைத்த நடிகர் அஜித்துக்கு ஒரு ராயல் சல்யுட்//

    இதுவும் ஒரு கேள்விக்குறியதே.

    உங்கள் உள்ளக்கிடையென்னவென்றால், கருனானிதி கொடுங்கோலாட்சி புரிய, அவரைச்சுட்டி ஒரு ஜால்ராக்கூட்டம் இருக்கிறது.என்பதே.

    இதைச் சொல்ல ஏன் அஜித் வரவேண்டும்? ஏன் உங்கள் வலைபதிவுகளில் எழுதக்கூடாது? பலர் செய்கிறார்கள். கருனானிதி அவர்களையெல்லாம் ஜெயிலில் போட்டுவிட்டாரா?

    பொ்துமேடைகளிலும் செய்யலாம். ஜெ, வி.காந்த், சு.சுவாமி, சோ இவர்களெல்லாம் நன்றாகச்செய்து வருகிறார்கள்: ஊடகங்களில், நீதிமன்றங்களில், பொதுமேடையில்.

    இவர்களையெல்லாம் ஏன் எங்கள் மவுனத்தை இவர்கள் வெளிபபடை மொழியாக்கினார்கள் என்று ஏன் எழுதவில்லை?

    தொடக்கத்தில், அஜித் இரசிகன் இல்லையென்று ஆரம்பித்து, பின்னர் அஜித்தே எங்கள் வாழ்வு என முடித்துள்ளீர்கள்!

    இல்லையென்றால், இவரை விட நன்றாக கருனானிதியையும் அவர் குடும்ப அரசியலையும் வாங்கு வாங்கு என வாங்குவோரை மட்டும் விட்டுவிட்டு ஒரு நடிகன் சொன்ன ஒரு வாக்கியத்தை மட்டுமே பாராட்டுவது ஏன்?

    ReplyDelete
  6. அஜித்குமார் மட்டுமே ஆண்மகன் என்றால், நீங்கள் இல்லயென்றாகிறது. 6 கோடி தமிழர்களில் ஒருவர் கூட இல்லயென்றாகிறது.

    சரியா?

    ReplyDelete
  7. idhu kandanaththirkuriyadhu.. edharkaaga royal salute ajith irku.. idhu enakku migundha mana varuthathai alikkiradhu..

    why u didn't put nepoleon salute.. i do not like royal brand.. enakku eppovume nepoleondhaan.. ini eppovum yaarukkum nepoleon salute podumaaru mirattugiren..

    ReplyDelete
  8. ராயல் சல்யூட் என்றால் இருபத்தெட்டு gun சல்யூட் என்று பொருள்.

    பதிவாளர் அப்படிப்பட்ட சல்யூட் அடிக்க விரும்புகிறார்.

    ReplyDelete
  9. உங்கள் பதிவை பார்த்த பின்புதான் அஜித் பிரச்சினை பற்றி முழுமையாக தெரிய முடிந்தது...!

    தமிழ்நாட்ல என்னன்னவோ நடக்கிறது............!



    வாழ்த்துக்கள் சகா...!

    ---ஜெபா...

    ReplyDelete
  10. உண்மை. உண்மை தவிர வேறொன்றிமில்லை.

    ReplyDelete
  11. நச்..

    super.. super.. super post..

    ReplyDelete
  12. மிகச் சரியாக சொன்னீர்கள்.உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  13. திரை உலகில் இயக்குனர்களுக்கும் திரைப்பட தொழிலாளிகளுக்கும்(பெப்சி) இடையே பிரச்சினை எழுந்த போது..கமலோடு சேர்ந்து பெப்சி இயக்கத்திற்கு ஆதரவு தந்தவர் தான் இந்த அஜித் ...மனித நேயத்தின் மறுபெயர் தான்...அஜித்

    ReplyDelete
  14. super stalin..... best of luck...

    ReplyDelete
  15. Ajith proved the power of silence....

    Cinema la Dialoge Pesisna Clap Panringa....
    Nerla Pesina Kai thaturavangalaum vida matranunga .....

    Pechurimai illadha Jananayagama?

    ReplyDelete
  16. HMMM....

    Sari yen Ajith tamil nadu perachnai pathy pesanum..

    Kaviri pathy pesama irunthu irukalam..??

    meeratal thappu dhan...

    Unga karuthu konjam kooda tamil makkaluku support ilai...

    ajit kku padam yaar paarkura???
    avaruku yethu ivlo paman,, pugal,, elm.....


    tamil makalukku vanthu pesalame avar..??

    ReplyDelete
  17. Jo Amalan Rayen Fernando போன்ற மொக்கைகள் எதற்கு பொது கருத்துகளில் மூக்கை நுழைக்கின்றனரோ ? தெரியவில்லை.

    உங்களை போன்ற ஆட்கள் இருப்பதால்தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவதில்லை.

    ReplyDelete
  18. http://mathimaran.wordpress.com/2010/02/24/artical-282/

    ingu padikka...

    ReplyDelete
  19. Good !!!

    After reading such blog only I could understand why Ajith kumar & Rajinikanth was targeted in recent days... What a shame, Where are we living in...

    Media, Are you just doing 'Jaajra'... to politicians and 'Sangam's? Just think over your responsibility on this socity?

    ReplyDelete
  20. Nicely presented the real factor... keep it up

    ReplyDelete
  21. I also support Mr.Ajith, for what he said is 100% right.
    But I beg to differ in one context.
    Though what he said is correct, but time & place made all the difference.Let him not invite wrath from pigs.
    He has to yearn for good, respectable position in the industry. I pray for maturity in him in the coming days-years.

    ReplyDelete
  22. என் நண்பன் தன் வலைப்பதிவில் எழுதியிருக்கிறார் இப்படி:”தினேஷ் கார்த்திக் ஒரு தமிழன் தான என்பதில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. முற்றுகை போராட்டம் நடத்த தமிழ் அமைப்புகள் எனக்கு ஆதரவு தரவேண்டும் ...சென்னை சூப்பர் கிங்க்ஸ் க்கு எதிராக விளையாடுகிறாரே!!! ஜாக்குவார் அண்ணே பார்த்து எதாவது பண்ணுங்க; உங்க ஆதரவு மட்டும் இருந்த போதும் அந்த பயலை நாடு கடத்தி விடலாம். ஜாக்குவார் அண்ணே, நீங்க ஒரு பொண்ண கற்பழிக்க முயற்சி பன்னுநீர்களே அது என்ன ஆச்சு? பச்சை தமிழன்ன அப்படி இப்படி தான் இருக்கணும்// சரி அதை விடுங்க . . . ”
    எனக்கு உங்கள் பதிவை படித்தபோது இந்த ஞாபகம் தான் வந்தது :))

    ReplyDelete
  23. //Jo Amalan Rayen Fernando போன்ற மொக்கைகள் எதற்கு பொது கருத்துகளில் மூக்கை நுழைக்கின்றனரோ ? தெரியவில்லை.

    உங்களை போன்ற ஆட்கள் இருப்பதால்தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்ய அஞ்சுவதில்லை//

    ஆர் என்ன சொன்னாலும் ஆட்சியில் இருப்பவர்கள் தவறு செய்து கொண்டேதான் இருப்பார்கள். ஜெ. கருனா, காங்கிரஸ், வி.காந்த், சரத், வைகோ, என்று எவர் ஆட்சிக்கு வந்தாலும் கதை ஒன்றுதான்.

    கருனானிதிக்கு ஒரு போலியான பாராட்டுவிழா என்பது எவருக்கும் தெரியாதா? எல்லாருக்குமே தெரியும். இதை ஏதோ அஜித் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிய்ம் என்று பதிவு போட்டு அஜித் ஒரு பெரும் சாதனை செய்து விட்ட ஆண்மகன் என்பது கப்சா.

    நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அஜித்தால் ஒன்றும் செய்ய முடியாது.

    நான் ஏற்கனவே உண்மைத்தமிழன் பதிவில் எழுதிய மாதிரி, கருனானிதியை அகட்டவேண்டுமானால் தேர்தலில் மட்டும்தான் செய்யமுடியும். கட்சி ஆரம்பி. மக்களை வலை வீசிப்பிடி. ஆட்சியைப்பிடி. முதலமைச்சராகு. எனக்குப்பாராட்டு விழா வேண்டமென சொல். செய். காந்தியாபோல ஒரே ஒரு ஆடையில் வா.

    முடியுமா இந்த அஜித்தால்? கோட்டு, சூட்டு, கோடிக்கணகான பணம், சொகுசுக்கார், மாளிகை என வாழும் நடிகன் எவனாலும் முடியாது.

    எனவேதான் இவனெல்லாம் வெத்துவேட்டு என்கிறேன்.

    கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்: எவன் ஒருவேளையாகவாவது என்றாவது ஒருநாளாகவாவது பட்டினி கிடந்திருந்தால்தான் பட்டினி என்ன என்று தெரியும்?

    அஜித்துக்கு தெரியுமா?

    முதலில் அஜித் வாழ்க்கையைப் படிக்கட்டும். பின்னர் ஆண்மகனா இல்லையா என்று சொல்ல்லாம்.

    ReplyDelete
  24. விதம் விதமான ஆடம்பர ஆடைகளில் கறுப்புக்கண்ணாடி போட்டு macho look அஜித் கொடுப்பது எதற்காக? இங்கே ஒருபடம் போட்டிருக்கிறார்?

    அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டமெல்லாம் எதற்காக?

    எல்லாமே தன்னை ‘ஹீரோ’வாக ஆக்கிக்கொண்டு தமிழக வாலிபர்களின் நாயகனாக ஆக. இரசிகர்களைப்பெருக்கி, ஹீரோவாக.

    ஊரே தன்னைக்கொண்டாட.

    இவருக்கு முன் நிறைய நடிகர்கள செய்த வித்தைதான்.

    தமிழ் இளைஞர்களை சிந்த்திக்கிவிடாமல் அடிமைகளாக ஆக்கியவர்கள் இந்த நடிகர்கள்.

    இப்படிப்பட்ட ஒரு நடிகனை ஆண்மகன் என்றால் மற்றவர்கள் ஆர்?

    தன் சுய்நலத்திற்காக பேசிய பேச்சு அந்த மேடைபேச்சு. தனக்கு வரப்பிடிக்கவில்லை. மற்றவர்களோடு இணைத்துப்பார்த்தால் தன் கவுர்வம் பாழ் என்ற நினைப்பு.

    அஜித் செய்தது வீரமல்ல. தமிழ்கத்தில் ஒரு நல்லாட்சி வரச்செய்ய விரும்பினால், அதை அஜித்தால் முடியாது. அவருக்கு வேண்டியது சினிமாவும் பணமும் இரசிகர் மன்றங்களும்

    ReplyDelete
  25. அஜித்தும் ரஜனியும் வரவில்லயென்றால் மற்ற நடிகர்கள் பாராட்டுவிழா நடத்தாமல் விட்டுவிடுவாரகளா? கருனானிதியும் இவர்கள் இருவரும் இல்லயென்றால் எனக்கு ஒன்றும் வேண்டாமென்று சொல்லிவிடுவார்களா?

    பாராட்டு விழாக்கள் நடத்த, காக்காய் பிடிக்க ஆயிரக்கணக்கானோர் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை அதன் மூலம் கிடைக்கின்றனா.

    கருனானிதி போனால், ஜெ வந்தால் ஜெக்கும் நட்த்துவார்கள்.

    மக்கள எல்லாரும்,
    “அஜித் பேசிவிட்டார்; நாங்கள் கண்டுபிட்த்துவிட்டோம்: கருனானிதி நாட்டைக்கெடுக்கிறார்” என்று சொல்லி தெரிவில் நின்று போராட்டம் நடத்துவார்களா?

    இல்லவே இல்லை. அஜித் சொல்லித் தெரிந்தது என இந்த்ப்பதிவாளரும் சிலரும் சொல்வார்கள். மக்கள் சொல்லமாட்டார்கள்.

    அஜித்தும் இரஜனியும் தேர்தல் களத்தில் குதித்து, மக்கள் ஆதரவைபெற்ட்டும்.

    ReplyDelete
  26. இந்த கலககுரல், இந்த கம்பீரம் தன்மான பிரச்சனை... அஜித்குமார் என்ற ஆண்மகன்...இது எல்லாம் அஜித்துகே...புதுமையா இருக்கும் நண்பரே ...உங்களிடம் இருந்து நாங்க இன்னும் நிறைய எதிர்பார்கிறோம் ...அஜித் மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினர்...

    ReplyDelete
  27. // அரசியல்வாதிகளை பொது பிரச்சச்சனைகளை பார்த்து கொள்ள சொல்லுங்கள், நாங்கள் எங்கள் தொழிலை மட்டும் பார்க்கிறோம்" //

    வரவேற்பிற்குரிய விசயம்...ஆனால் அரசியலுக்குள் சினிமாவும்...சினிமாவிற்குள் அரசியலும் நுழைந்து..வேர்விட்டு மரமாகிவிட்டது...அதனால் இதுபோன்ற சர்ச்சைகளை சந்தித்துத்தான் ஆகவேண்டும்..
    என்ன கொடுமை சார் இது.....

    ReplyDelete
  28. அந்த ஜாகுவார் ஒரு காம கொடூரன்....கற்பழிப்பு வழக்கில் உள்ளே இருந்தவன்.....

    ReplyDelete
  29. thalaaaaaaaaaaaaaaa thalaaaaaaaaaaaaaaaaaaaa

    ReplyDelete
  30. Nice work..........

    ReplyDelete
  31. Namma oorla than unmaya pesuna kutham la nanba...

    ReplyDelete
  32. Really nice

    anbukku.blogspot.com

    ReplyDelete
  33. Really nice
    anbukku.blogspot.com
    www.onlineinet.com

    ReplyDelete
  34. "புயலாக வந்து எல்லோருடைய மவுனங்களையும் உடைத்த நடிகர் அஜித்துக்கு ஒரு ராயல் சல்யுட்"
    really superb artical friend.. thala pola varumanu solla vachitaar ajith..

    ReplyDelete
  35. This comment has been removed by the author.

    ReplyDelete
  36. super stalin neenga sonna karuthu nallathuthan aanalum tamilnadu makkalukaga ithu varai ajith seitha ethavathu nalla kaariyam eruka

    ReplyDelete
  37. இவ்வுலக வாழ்வில் யாரையும் கேவலமாக என்னைவிட வேண்டாம்.. இந்த பரந்த உலகில் நீங்கள் இறக்கும் முன் சந்திக்கும் கடைசி மனிதன் கூட உங்களுக்கான செய்தி ஒன்றை வைத்திருப்பான். அது யாராக வேண்டுமானலும் இருக்கலாம். இதற்க்கு நீங்களோ நானோ இல்லை ஏன் அஜித் கூட விதி விலக்கு இல்லை. கரியை கூட வைரமாக மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு என்பதை தெளிவுபடுத்துகிறேன். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்

    --
    என்றும் அன்புடன் உங்கள் சகா
    *பயமறியான்*

    http://payamaiyaan.webs.com
    http://payamariyaan.blogspot.com
    http://pilaigal.blogspot.com

    ReplyDelete
  38. சரியா சொன்னிங்க ...சில நேரம் வெளிப்படையா பேசினால் அதோட பின் விளைவுகள் பாதிக்குமோ என்ற குறுகிய மனப்பான்மையில் திரையில் மட்டும் வசனம் பேசும் எத்தனையோ நடிகர்கள் ஆளும் கட்சி அரசியல் தலைவரை புகழ்ந்து பேசிவிட்டு ஓடி விடுகின்றனர்.... அஜித்குமாரின் பேச்சை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.... இருந்தாலும் அதற்குள்ளும் ஒரு சின்ன சுயநலம் இருப்பது போன்று தெரிகிறது ஸ்டாலின்.... பொது மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கக்கூட வலிக்கும் இவர்களுக்கெல்லாம் நாம் ஒருபோதும் துணை நிற்கக்கூடாது என்பதுதான் அது .... ஈழத்தில் தமிழர்கள் செத்து மடியும்போது அதற்க்கு குரல் கொடுக்கக்கூட இவருக்கு மனம் வரவில்லை என்றால் என்ன சொல்வது ....

    சாதாரண மனிதனுக்குக்கூடத்தான் வேலை இருக்கிறது ..... கட்டாயபடுத்தக்கூடாதென்பதை ஏற்றுக்கொள்வோம்.... பொதுநல அக்கறையில்லா இவர்களுக்கு நாமும் துணை நிற்க வேண்டாமென்பதுவே என் கருத்து .....

    நன்றி ஸ்டாலின்!

    ReplyDelete