Wednesday, March 3, 2010

நித்தியானந்தாவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்


ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுவர்... அரசு எப்போது எல்லாம் தவறு இழைக்கின்றதோ அப்போது எல்லாம் அதை தட்டிக் கேட்கும் தார்மீக கடமை இந்த ஊடகங்களுக்கு இருக்கின்றது. தமிழகத்தின் இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினால் மவுனமே நமக்கு பதிலாக கிடைக்கிறது.

அரசு தனது பதவியை தக்க வைத்து கொள்ள எப்போதும் பிரச்சனையின் வேரை பார்க்காமல் அதை எப்படி திசை திருப்புவது என்பதிலே தான் தன் கவனத்தை செலுத்துகிறது... சமீப காலத்தில் தமிழத்தில் சில முக்கியமான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்த போது அது சாமர்த்தியமாய் திசை திருப்பப்பட்டன. சோதித்து பார்க்க வேண்டும் என்றால் கடந்த ஓர் ஆண்டின் நாளிதழ்களை கொஞ்சம் புரட்டி பாருங்கள்...இரண்டு நாட்கள் முக்கியமாய் இருக்கும் செய்திகள் பின் காணாமல் போய் இருக்கும்.பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அப்பட்டமாய் அரசுக்கு துணை போவது தெரிய வரும்..

செய்தி 1:

அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் கலவரம்:

அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஜர்கண்டை சேர்ந்த கெளதம் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்... 'தாமதமாய் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார்' என்று கூறி வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதில் இது வரை பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.














செய்தி 2

பிரபல சாமியார் நித்தியானந்தாவின் லீலைகள்

தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் சுவாமி நித்தியானந்தா. ஒரு நடிகையோடு நெருக்கமாக அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆளும் கட்சியின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ஒன்று.

இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.

சரி செய்தி 2 ல் இருந்து துவங்குவோம். சாமியார்கள் தான் இன்றைய தமிழகத்தின் சாபம்... ஆண்டவனின் அருளுரைகளை வழங்குகிறேன் பேர்வழி என மக்கள் மனங்களை கரைத்து இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல... பிரேமானந்தா துவக்கி வைத்த பட்டியல் இன்று நித்தியானந்தா வரை நீள்கிறது...
இந்தியாவில் தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனையாளர்களை போல் வேறு எங்கும் உருவானதும் இல்லை, உருவாக போவதும் இல்லை.. இருப்பினும் இங்கே தான் மதத்தின் பெயரால் போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் குவிந்து கிடக்கின்றனர்..அந்த குவியலில் ஒருவர் தான் நித்தியானந்தா..

சரி பொது வாழ்வில் வந்து, ஆன்மீக வேடமிட்டு இது போன்று தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்யலாம்??? வேறு வழியே இல்லை, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் நிக்க வைத்து 'நறுக்'

சரி செய்தி 1க்கு வருவோம்.... விபத்துகளில் அடிபட்டவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் சரிவர கவனிக்கப்படாமல் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. சக மாணவன் ஒருவன் தவறான சிகிட்சையாலோ இல்லையேல் சரியான சிகிச்சை கிடைக்காமலோ உயிர் இழக்க நேரிடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் துயரமும், பெரும்கோபமும் இயல்பானதே. உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மாணவர்களை சரியாக கையாள தெரியாத ஆளும் வர்க்கம் தனது அரசு ரவுடிகளை வைத்து அடித்து துரத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்... இதை விட ஒரு அரசின் கையாலாகாத தன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.. ஜனநாயகம் நாம் வாழும் சமூகத்தில் எத்தனை வன்மையாக நசுக்கபடுகிறது என்பதை பாருங்கள்.

ஆறு இந்தியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட உடனையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆப்கானுக்கு சென்று உள்ளார். சொந்த நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் அதுவும் ஒரே பல்கலைகழகத்தில் பல வட இந்திய மாணவர்கள் அரசு ஊழியர்களால் அடித்து கொல்லப்பட்டிருகின்றனர். என்னவென்று கேட்க வேண்டிய மத்திய அரசோ மவுனம் சாதிக்கிறது...உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள்???

உண்மையாக நடந்த செய்திகளை வெளி கொண்டு வராமல் இருப்பது கூட பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதே.

ஒரு உண்மையை மறைக்கவே முன்பே தமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியும், ஒரு புலனாய்வு பத்திரிக்கையும்..

நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

18 comments:

  1. I like this comment, media is a responsible for event...

    ReplyDelete
  2. Write an article abt nadigar sangam....

    Suntv and dinakaran published news about Actress Ranjitha.

    Will SuperStar Rajini talk about this issue and organise a protest? Will he condemn Sun TV for showing Actress Ranjitha? Will he go against his producer Sun Pictures?

    Now will Vivek talk bad abt Suntv? Will Suriya talk SUN TV as "Eeena Pasanga??"??

    Will Sarathkumar condem the Dinakaran??

    Will Karunanidhi Arrest Kalanidhi maran for publishing the news??

    What is Nadigar sangam gonna do abt Ranjitha in Prostitution sex News??

    Few months back nadigar sangam condemned the newspapers and an editor was arrested for publishing news abt the actress...Surya/vivek/superstar/sathyaraj/vijaykumar/sarathkumar etc said all actresses pathini they are homely etc etc...

    Now will they have spine/GUTS to condemn SUN TV? ask for the arrest of Kalanidhi maran?
    Superstar next movie producer Sun tv will he condem sun network?
    Will nadigar sangam condemn the act and protect the actress??

    Dei ippo sun tv ethira kandanam sollunga parpom? actor surya enga...ippo sollu SUN TV EENA PAsanga potrukaanganu sollu ...
    Nadigar sangam aambilaina sollatum parpom???

    Usual saamiyar matteru vidungapa..most samiyars are POLI only...makkal anubava pattu adivangi appurama thirunthuvaanga...

    Namma NAdigai matteruku varuvom..intha Vivek engappa..SUN Tv kandichu pesa sollunga...parkalam??

    ReplyDelete
  3. the lion lives in a cat body, surley the saint will punished by the pepole

    ReplyDelete
  4. ஒவ்வொரு தமிழனின் ஒட்டு மொத்த மனக்குமுறல் உங்கள் மூலம்...
    ஆனால் எவனும் வாய் திறந்து பேசமாட்டான் ... உங்கள் வார்த்தைகள் ஒரு நாள் நடக்க வேண்டும் அப்போது தான் இந்த காம கயவர்கள் ஒழிவார்கள்....

    ReplyDelete
  5. stalin ,

    Bayangaram.........

    By Kiruba.C

    ReplyDelete
  6. ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

    நிறைய பேர் நித்யானந்தாவ பத்தி மட்டும் எழுதி அதுல விளம்பரம் தேடிக்க முற்படுறாங்க .... உங்களோட பொதுநல கண்ணோட்டம் உங்க மேல இருக்குற மரியாதையா இன்னும் கூட்டுது ஸ்டாலின்....

    எப்போவுமே பாருங்க அரசியல்வாதிகள் கெட்டபேரு வந்திட கூடாதுன்னு மனசாட்சியே இல்லாம திசை திருப்பி விட்டு கவனிக்கப்பட வேண்டிய விசயத்த இருட்டடிசிடுறாங்க....

    கடவுள்ங்கற ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கு..... நாம இந்த மாதிரி சாமின்னு சொல்லி ஏமாத்துறவங்கள நம்பகூடதுனு ஏன் மக்களுக்கு புரியாமட்டேங்குதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டுலயும்.....

    ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

    அருமையான கட்டுரையை சரியான நேரத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள்.... எல்லோரும் படிக்க வேண்டும்.... தொடரட்டும் உங்கள் நல்ல படைப்புக்கள் ....

    ReplyDelete
  7. Kala paravai in siragugal ennum viriyatum...ezham ullangalai sinthika vaikirigal.....
    yendrum ungalil oruvanga naan.....

    ReplyDelete
  8. மறதி...

    ஒரு தேசிய வியாதி...

    ReplyDelete
  9. our media has to mature and become more responsible socially by focussing on the issues concerning the poor. but they seem to be outrightly profit-oriented. their concern seems to be the day's sale of their paper.

    ReplyDelete
  10. //ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!//


    இந்திய தேசத்தில் நேர்மையான குடிமகனாய் இருப்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற விசயம். வேணுமானால் மனிதாபிமானிகளாக இருக்கலாம்.

    சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளாய் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க இனத்தவர் ஒருவரை அமரிக்கர்கள் தமது தலைவனாக தேர்ந்தெடுத்துள்ளனர். ஆயிரம் வருடங்களாக தொடரும் தாள்த்தப்பட்ட மக்களில் ஒருவனை இந்தியத் தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியுமா? என்னும் ஆயிரம் வருடமானாலும் நடக்காது.

    இந்தியர்கள் பல நாடுகளில் கொல்லப்படுகின்றனர். இம்சிக்கப்படுகின்றனர் அதற்கெல்லாம் இந்தியா நேர்மையாக குரல் கொடுக்குமா? இலங்கைப்படைகளால் கொல்லப்பட்ட 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் குறித்து இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

    எல்லோருக்கும் உணவை உற்பத்தி செய்யும் நாட்டின் மகத்தான விவசாயிகள் ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்களே அவர்களுக்கு என்ன செய்தது?

    விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நேர்மையாக இருக்கமுடியாது. அடிமையாய் அல்லது அடிமைப்படுத்துபவனாய் அல்லது அல்லக்கையாய் மட்டுமே இருக்க முடியும்

    ReplyDelete
  11. ஓ இப்படி முழங்காலுக்கும், மொட்ட தலைக்கும் முடுச்சு போடலாமா?

    ReplyDelete
  12. நமது ஜனநாயக நாட்டில் சமுக பொறூப்புணர்வு சுத்தமாக யாருக்கும் இல்லையென்பது ஒரு வேதனையான ஒன்று, அதுவும் சமூகத்தின் நான்கு தூண்களும், இன்னும் மோசமாகி விட்டன. சிதம்பரம் பல்கலை விவகாரத்தில், அரசு தான், மாணவர்களை கொன்றதுயென்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. ஏனெனில் கடந்த ஆண்டு, சென்னையில், வழக்குறைஞகள் நடத்திய வெறியாட்டதை தடுத்த போலிசுக்கு, இன்னும் நியாயம் கிடைக்காத சூழ்நிலைதான் உள்ளது. இதில் ஒட்டுமொத்த மக்களும், அவர்களின் தீர்ப்பு மூலம் ஆள்வோறும் மாறினால் தான், நம்மால் வளர்ந்த நாடுகளுடன் போட்டி பொடமுடியும் என்பது என் கருத்து.

    ReplyDelete
  13. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete
  14. all newspapers published abt our honorable CM s FAMILY TREE n their Branches, sub branches, etc at d time of central election. nothing s better than this FAMILY TREE to make a great image of TAMIL NADU.

    Kalaachaaram mikka oru thalaivanai kondamaikku mudhalil perumaippaduvom..piragu pesalaam poli saamiyaargal nithyanandha, premanandha, john Joseph patri.

    ReplyDelete