Monday, May 3, 2010

சொன்ன கதை


"ஒரு ஊர்ல ஒரு

காக்கா இருந்திச்சாம்" - என
பாட்டி அம்மாவுக்கு
சொன்னக் கதையை
சொல்லத் துவங்கினேன்
என் மகனிடம்...
இடைமறித்து கேட்டான்
"டாடி காக்கான்னா...
என்ன டாடி.?"

http://youthful.vikatan.com/youth/Nyouth/stalinpoem190410.asp


5 comments:

  1. ஹா ஹா..காலம் எப்படி மாறிப் போச்சு பாத்தீங்களா? பரிதாபமாகத் தான் இருக்கிறது இந்த காலத்து குழந்தைகளைப் பார்க்க. என் குழந்தைப் பருவத்தில், சக விளையாட்டுத் தோழர்கள் யாராவது காக்கையைப் பிடித்து அதன் சிறகை மெல்ல வெட்டி, அதை வைத்து விளையாட்டு காட்டினால் நேரம் போனது தெரியாமல் வேடிக்கைப் பார்த்தது நியாபகத்திற்கு வருகிறது. டைனசரையும், டிராகனையும் தெரிந்து வைத்திருக்கும் இந்த காலத்து குழந்தைகளுக்கு காகத்தைப் பற்றி தெரியாமல் போனது காலத்தின் குற்றமா அல்லது பெற்றோர்களின் குற்றமா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ஆசிரியரே?

    ReplyDelete
  2. அழுத்தமான கதை....
    கவிதை பூரணம்...

    ReplyDelete
  3. இயல்பான வரிகளில் இன்றைய குழந்தைகளின் பரிதாப நிலையை சுட்டிக்காட்டி இருக்கீங்க . அருமை...அழுத்தமான கருத்து.

    ReplyDelete
  4. மாநகரங்களில் வளரும் குழந்தைகளுக்கு கார்ட்டூன் கதாபாத்திரங்கள் தான் அதிகம் தெரியும். அது கிட்ட போய் காக்கா, குருவி பத்தி கதை சொன்னா எப்படி புரியும்? ;-)

    ReplyDelete
  5. நாலு வரின்னாலும் கடைசி வரி

    நச்!!!

    :)))

    ReplyDelete