Monday, August 17, 2009

மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி - கூகிள் ஃபில்டர் ஒரு எளிய விளக்கம்


"மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி " - மொக்கை ராசாக்கள் தப்பா நினைக்காதீங்க, மின்னஞ்சலில் மொக்கைகள் போடுவதற்கும் ஒரு தனி திறன் வேண்டும்.... இது உங்களை குறை சொல்லும் பதிவு அல்ல....... மேலும் கணிப்பொறியிலும், மின்னஞ்சல் உலகிலும் அசர வைக்கும் அறிவை பெற்றிருக்கும் வல்லுனர்களும் இந்த பதிவை தவிர்க்க.. அப்புறம் உங்க டைம நான் வேஸ்ட் பண்ணிட்டேண்ணு சொல்லப்பிடாது ஆமா..

இணைய தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், மின்னஞ்சல் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.மின்னஞ்சல் சேவையை பல பன்னாட்டு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. கூகிள், யாஹூ,ரீடிஃப் போன்றவை மின்னஞ்சல் சேவை வழங்கி வரும் சில முக்கியமான நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவங்களுக்குள் ஏற்படும் போட்டியை சமாளிக்க புது புது மின்னஞ்சல் வசதிகளை உபயோகிப்பவருக்கு கொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது "குருப்ஸ்(Groups)" எனப்படும் "குழுக்கள்" சேவை.

இன்றைய தேதியில் மட்டும் தமிழில் சுமார் 1300 குழுமங்கள் உள்ளன. நான் உட்பட நம்மில் பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழுமங்களில் உறுப்பினர்களாக இருக்கிறோம். குழுமங்கள் நமது எழுத்து திறமையை அதிகரிப்பதற்கும், கலந்துரையாடவும் ஒரு சிறந்த களமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எண்ணற்ற குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் நண்பர்கள் தனக்கு தனி பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களை தவற விடுவதும் இதில் வாடிக்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கூகுல் வடிகட்டி (Google Filters) ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

கூகுல் வடி கட்டியை பயன்படுத்தும் முறை

1. நமது மின்னஞ்சலை திறந்து கொள்ளவும் (எ.கா. எனது மின்னஞ்சலின் முகப்பு இது. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல்களை வடி கட்ட வேண்டும்)


2. நாம் வடிகட்ட வேண்டிய குழுமத்தின் எதாவது ஒரு மின்னஞ்சலை திறந்து கொள்ளவும்.Reply(பதிலளி)என இருக்கும் பொத்தானுக்கு அடுத்து இருக்கும் பொத்தானை அழுத்தவும்.அதில் மூன்றாவதாக வரும் Filter Message like this (இது போன்ற வடி கட்டிய செய்திகள்)-ஐ சொடுக்கவும்(click).


3. இப்போது எப்படி நீங்கள் வடிகட்ட விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்யவும் (எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமததிற்கு வரும் எல்லா மின்னஞ்சலையும் வடிகட்ட வேண்டும்). நீங்கள் தேர்வு செய்த பின் Next Step (அடுத்தபடி) என்ற பொத்தானை சொடுக்கவும்.


4. இந்த பகுதியில் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சலை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.(எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் யாவும் இன்பாக்ஸ் செல்லாமல் புதிய லேபில் உள்ளே செல்ல வேண்டும்.)


5. நீங்கள் வடி கட்ட விரும்பிய குழுமத்திற்கு இடும் புதிய லெபில்-ஐ இங்கே கொடுக்கவும். (எ.கா. நான் எனது புதிய லேபிழுக்கு 'sx' என பெயர் வைத்துள்ளேன்)


6. இப்போது நீங்கள் Create Filter(வடிப்பானை உருவாக்கு) என இருக்கும் பொத்தானை சொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு புதிய லேபில் உருவாவதுடன், நீங்கள் குறிப்பிடும் குழுமத்திற்கு வரும் மின்னஞ்சல் யாவும் அந்த லேபிழுக்குள் தானாகவே போய் விடும்.( எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் எல்லா மின்னஞ்சல்களும் இப்போது இன்பாக்ஸ் போகாமல், sx என்ற லேபிழுக்குள் போய் விடும். create filter என்ற போத்தானுக்கு வலப்புறமாக இருக்கும் வெளியை டிக் செய்யும் பட்சத்தில் ஏற்கனவே அந்த குழுமத்தில் இருந்து வந்த எல்லா மின்னஞ்சல்களும் sx என்ற லேபலுக்குள் போய் விடும்.)


7. நிறைய குழுமங்களும், நிறைய லேபல்களும் இருக்கும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் முகப்பின் இடது ஓரம் இது போல் காட்சி தரும்.


Google Filters குறித்த உங்கள் சந்தேகங்களை stalinfelix2000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் செய்யலாம்.. மேலும் விமர்சனங்களே ஒரு எழுத்தாளனை உருவாக்கும்... உங்கள் விமர்சனங்களை இங்கே பதிவு செய்யவும்

8 comments:

  1. எப்படி ஒரு தேவை இல்லாத mail- ஐ block பண்ணுவது என்று ரொம்ப நாளாக நினைத்து கொண்டே இருந்தேன். மிகச் சரியான நேரத்தில் எனக்கு இந்த விஷயத்தை சொல்லிக் கொடுத்த கவிஞருக்கு கோடி நன்றிகள்!!!

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா

    ReplyDelete
  3. வலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/

    ReplyDelete
  4. ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
    அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும்
    வெளியிடலாம்.

    உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
    Add-தமிழ் பட்டன் இணையுங்கள் !
    விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
    செய்யுங்கள்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி தமிழினி,ராம், முரளிகண்ணன்...

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி கீதா

    ReplyDelete