Wednesday, September 30, 2009

டமிலக அரசு விருதுகள்- எதற்காக ???


டமிலக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட, விருது பெற்றவர்களோ தனக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது என முழித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த "சாதனை" அவரவர் வீட்டிலே தொலைபேசி வழியாய் ஒலிக்கிறது. சிலரது வீட்டில் நாமும் ஒட்டு கேட்டதில்...

கஜினி காந்த்: அன்பு கஜினியே, இளைஞர்களின் இதய துடிப்பே.....அரசியலுக்கு இப்போது வருவேன், அப்போது வருவேன் என அலம்பு காட்டி அலுவா கொடுத்தவனே, தேர்தலில் எனக்காய் "வாய்ஸ்" தந்தவனே, சின்ன பையன் 'சாகுல் காந்தி' அரசியலுக்கு அழைத்த போது கூட என் கண் அசைவுக்கு காத்திருந்தவனே... இதோ பிடி உனக்கான விருதை..

ஜமல ஹாசன்: தம்பியே என் தங்க கம்பியே... ஒவ்வரு மேடையிலும் என் புகழ் படுபவனே... எனக்கு கேமராவில் மட்டும் நடிக்க வராது என புரிந்து 'துசவதரத்தில்' என்னை போன்ற ஒரு டூப்பை நடிக்க வைத்தவனே, 'தன்னை போல் ஒருவனில்' என் குரலையும், என் வீட்டையும் பதினெட்டு திக்கும் பரப்பியவனே... இதோ பிடி உனக்கான விருதை

கிரிஷா: அழகிய கிரிஷவே உன் அழகை கண்டேனம்மா "லூசா லூசா "- வில் இருந்தே. 'சுருவி'-யில் நீ ஆடிய ஆட்டதுக்க்காகவே பாதி கோடம்பாக்கத்தை உனக்கு எழுதி வைக்க எண்ணி இருந்தேன். இடையில் ஈழ தமிழர் சோகம் என்னை கவ்வியத்தால் ஒத்தி வைத்தேன். 'வலைமாமணி' கிரிஷவே இதோ உனக்கான விருது.

சுடிவேலு

மதுரை காந்துடன் ஒன் டூ ஒன் ஆடியவனே. ஐயா ஐயா என விளித்து, ஆயிரம் தடவை காலில் விழுந்த உன் அலப்பறை தாங்காமல் தருகிறேன் உனக்கும் ஒரு விருது.

பைரமுத்து: இனிய பைரமுத்துவே ...மாதத்திற்கு ஒருமுறையாவது மேடையில் 'ஐஸ்' மழையை பொழிந்து என்னை ஜலதோஷம் கொள்ள செய்பவனே... அடுத்து நீ எழுத போகும் கோபாலபுரத்து காவியத்திற்காகவே இப்போதே தருகிறேன் ஓர் விருது.

சிறந்த வரைநடை ஆசிரியர்: ................................................(வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ள தமிழனாக எம்மை கருதுவதால் இதோடு நிறுத்தி கொள்கிறோம்.)

பின் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண் படுத்த அல்ல. எங்கையாவது புண் ஆகி இருந்தால் சொந்த செலவில் மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

13 comments:

 1. vaarthai jaalam nalla irukku..anna...sariyana seruppadi

  ReplyDelete
 2. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி முருகன்.

  ReplyDelete
 3. அப்பாடா..

  ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு துணைக்கு ஆள் இல்லையேன்னு நினைச்சேன்.. சிக்கிட்டாரு..

  நன்றிங்கோ ஐயோ..!

  ReplyDelete
 4. similar to Sathya in Thuklak weekly.. i will give 6 out 10 marks

  ReplyDelete
 5. :) இப்படி 'கடி'த்து வைச்சிருக்கீங்க.. பதிவு நல்லாத்தானிருக்கு. புறக் கவனம் அதிகம் போல:)

  ReplyDelete
 6. ha..ha..very nice..ippadi naalu peru narukkunnu kuduthalavathu sari varuthannu pappom..

  ReplyDelete
 7. சந்திரமுகில ஆவி புடிக்கிற scene-ல போர்வைய போர்த்திட்டு நடிச்ச நடிப்புக்கு award கொடுக்கிறப்ப, இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. தமிழ் நாட்டுக்கே தெரியும் இந்த award எல்லாம் எதுக்கு கொடுக்கிறாங்க-ங்கறது. எனினும், உனது விமர்சனமும், தைரியமும் பாராட்ட பட வேண்டியதே..

  ReplyDelete
 8. நபர் 1 :
  ' இதுல பயப்பட என்ன இருக்கு...? ஏன் ஆள் ஆளுக்கு... ஸ்டாலினை கலவரப்படுத்தறீங்க? '
  நபர் 2 :
  ' அதானே.. ஸ்டாலின் னு பேரு வச்சிக்கிட்டு இது கூட பண்ணலைனா எப்படி..? '
  நபர் 3 :
  ' அட நிப்பாட்டுங்கப்பா ' வீரம்னா..? என்ன தெரியுமா ? ' பயமில்லாத மாதிரி நடிக்கறது...
  நபர் 4 :
  ' ஒன்னும் புரில... ஸ்டாலின் உங்களுக்கு ஒரு விருது கொடுக்க சொல்லி.. ஆர்டர் போட்டுட்டாங்களாம்.. தலைமை செயலகம் கிராஸ் பண்ணும்போது.. டைப் - ரைட்டர் சத்தம்..கொஞ்சம் பலமா தான் கேட்டுச்சி..'

  [:)]

  ReplyDelete
 9. ம்ம் நல்லா சொன்னீங்க

  ReplyDelete
 10. nalla saataiadi Virudhugal ellam verum thugalaippona thamil maukkkaaga...

  ReplyDelete
 11. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி உண்மை தமிழன், பழனி, தமிழ் நதி, ஆன்டிரியா, காட்சன், இளங்கோ, பிரபு, வெர்ஜின்

  ReplyDelete
 12. கொல்றாங்களே....கொல்றாங்களே.....
  (உங்களுக்கு பிடித்த வாய்சில் கேட்பதாக வைத்துக் கொள்ளவும்.)

  ReplyDelete