Saturday, September 4, 2010

நேற்று நண்பன்... இன்று குழந்தை...... நாளை ?

நண்பர் காட்வினை பற்றிய முதல் பதிவுக்கு இங்கே செல்லவும்
http://stalinfelix.blogspot.com/2010/08/blog-post.html


அறுவைசிகிட்சையும், முதுகுத்தண்டில் ஒன்றிரண்டு கம்பிகளை தவிர எப்படி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்களோ , அதை போலவே ஏறக்குறைய ஒரு மாத மருத்துவமனை வனவாசத்திற்கு பின் வீடு திரும்பி இருக்கிறான் காட்வின். பேசவும், கை அசைக்கவும் முடிகிறது என்பதை தாண்டி இடுப்புக்கு கீழே எந்த அசைவும் இல்லாமல் படுத்து கிடைக்கிறான்.

இயற்கை உபாதைகள் அவனை அறியாமலே தன்னிச்சையாக வெளியேறுகின்றன.ஒரு குழந்தையை போல, எப்போதும் அவனோடு ஒருவர் இருந்தே கவனித்து கொள்ள வேண்டிய சூழல் என ஒவ்வொரு கணமும் கொடுமையாகவே நகர்கின்றது காட்வினுக்கு.

மருத்துவர்களிடம் இது பற்றி கேட்டால் 'இரண்டு மாதத்திலும் சரியாகலாம், இரண்டு வருடத்திலும் சரியாகலாம்' என கடவுளை நோக்கி கை காட்டி விடுகின்றனர்.

பெரும் கனவுகளோடு உற்சாகமாக வலம் வந்த காட்வின், சிதைந்த உடலோடு 'எப்படியும் சீக்கிரம் சரியாகி விடும், தொழிலை சீக்கிரம் ஆரம்பிப்பேன்' என்ற நம்பிக்கையோடே பேச ஆரம்பிக்கிறான்.'கொஞ்சம் உக்கார முடிஞ்சுதுன்னா வீட்ல இருந்தே சேனல ஆப்பரேட் பண்ண முடியும். ஆனா, கொஞ்சம் சாதனங்கள் வாங்கணும், மார்கட்டிங்க்கு ஆளு பார்க்கணும், விளம்பரங்களை சூட் பண்றதுக்கு ஆள் பார்க்கணும் ' என சொல்லும் போதே தன்னால் எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் தெறிக்கிறது.

கண்டிப்பாக உனக்கு உடல் நிலை சரியாகும், மறுபடியும் அலுவலகத்துக்கு போய் தொழிலை கவனிப்பாய் என நாங்கள் அவனை ஆறுதல் படுத்தினாலும் கடந்த ஒரு மாதத்தில் மற்ற உள்ளூர் சேனல்களில் என்னென்ன புது நிகழ்ச்சிகள் வந்திருகின்றது, தொழில் நுட்பம் என்னென்ன என்பதை கவனிப்பதிலே தான் அவனுடைய கவனம் செல்கிறது.

பணமும், சூழலும் மட்டும் சரியாக அமைந்த்திருந்தால் எத்தனையோ வெற்றிகளை கடந்து போய் இருக்க வேண்டிய ஒரு தொழில்நுட்ப வல்லுனன் கட்டிலிலே நாளைய நாட்களை பற்றிய கனவுகளிலே கழிப்பதை காணும் போது மனம் பெரிதும் துயருறுகிறது.


ஏறக்குறைய அரை நாளை அவனோடு செலவழித்து கிளம்பும் போது எப்போதுமே வருத்தப்படாத அவனுடைய கண்களில் விழிநீர் வழிந்தோடி விடை சொல்கிறது எங்கள் மூவருக்கும்.இப்போதைக்கு காட்வின் பேசுகிறான் என்பது மட்டுமே நாளை அவனை குறித்த எங்கள் நம்பிக்கைக்கு மிச்சம் இருக்கிறது......

காட்வினுடைய வாழ்வையும், கனவையும் தக்க வைத்து கொள்ள உங்களால் உதவ முடியும் எனில் உதவுங்கள்.
அவருடைய சகோதரருடைய வங்கி விவரம்
----------------------------------------------
Name: MARTIN JOSE G
Account No : 00041050461930
Bank : HDFC
Branch: ITC CENTRE, CHENNAI
IFSC NO: HDFC0000004
In Remarks please specify "SAVE GODWIN"
----------------------------------------------

மேலதிக விபரங்களுக்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் 9710421045

2 comments: