Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Friday, August 29, 2014

ஜீமெயில் உபயோகிப்பது இன்னும் எளிது -2


டிஸ்கி: இப்பதிவின் நோக்கம் ஜீமெயிலை இன்னும் எப்படி எளிதாக கையாளலாம் என்பதே, முதலில் இருந்து கற்றுத் தருவதல்ல..

4) உங்கள் ஜீமெயில் அஞ்சல்பெட்டி(Mail Box) அடிக்கடி நிரம்பிக்கொள்கிறதா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்கானது தான். தொடர்ந்து வாசிக்கலாம். 

ஜீமெயில் நிறுவனம் இலவசமாக தந்திருக்கும் 15GB ஐ நெருங்கி எந்த மடலை அழிக்க வேண்டுமென்று என்றேனும் திணறி இருக்கிறீர்களா? ஜீமெயிலை தீவிரமாக பயன்படுத்துபவர்கள், பல்வேறு மின்னஞ்சல் குழுமங்களில் உறுப்பினராக இருப்பவர்கள் சாதாரணமாக எதிர்கொள்ளும் பிரச்சனை தான் இது.
மிக எளிமையான வினவலை(Query) மூலம் இப்பிரச்சனையை தீர்க்கலாம்.. கீழே உள்ள புகைப்படத்தில் கொடுத்திருப்பதை போல 'larger:10m' என்ற வினவலையை கொடுத்து, அருகில் உள்ள தேடு(search) பொத்தானை சொடுக்குங்கள்.உங்கள் மின்னஞ்சல் கணக்கில் 10 MB -க்கு அதிகமாக இருக்கும் மடல்கள் அனைத்தையும் அவை காட்டும். இப்போது உங்களுக்கு தேவையான மடல்களை வைத்து விட்டு, தேவையற்றது என்பவற்றை அழித்துக் கொள்ளலாம். '10M' என நான் கொடுத்திருப்பது ஒரு சிறு உதாரணமே.. உங்கள் விருப்பத்திற்கு ஏற்றது போல '2M','5M','20M' என நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். 


5)பழைய மடல்களை வாசிக்க வேண்டுமா?

ஏதேனும் தேவையின் நிமித்தம் மூன்றோ, ஐந்தோ வருடங்களுக்கு முன்பு வந்த உங்கள் மடல்களை வாசிக்க வேண்டுமா??எளிது.

கீழே உள்ள புகைப்படத்தைப் பாருங்கள் (ஒரு உதாரணத்திற்கு, ஏழு வருடங்களுக்கு முன்பு எனக்கு வந்த மடல்களை தேடி இருக்கிறேன்). "older_than:'number'y" என்ற வினவலையை உபயோகப்படுத்துவத்தின் மூலம் நீங்கள் எளிதாக பழைய மடல்களை தேடிக்கொள்ளலாம்.

---------------------------------
அட, எங்க ஓடுறீங்க??இருங்க ;-).. மேலே குறிப்பிட்ட இரண்டு வினவலைகளையும் எப்படி சேர்த்து உபயோகிக்கலாம் என்பதையும் பார்த்து விட்டு நீங்கள் உங்கள் சோதனைகளை தொடங்கலாம்.

கீழே உள்ள புகைப்படத்தில் கொடுத்திருப்பதை போல, "larger:'number'older_than:'number'y" என்ற வினவலையை உபயோகிப்பதன் மூலம், ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு முன் உள்ள, மிக பெரிய மடல்களை நீங்கள் தேடிக்கொள்ளலாம். 


-தொடரும்

இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், முகநூல் வழியாகவோ, G+ வழியாகவோ உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய பதிவு: மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி


Wednesday, November 30, 2011

ஜீமெயில் உபயோகிப்பது இன்னும் எளிது -1

அட போப்பா... 'நாங்க பத்து வருசமா ஜீமெயிலை உபயோகிக்கிறோம்.... எங்களுக்கு தெரியாததா!?' என சொல்பவர்கள் பின் வாங்கி கொள்ளலாம்.

இந்த பதிவு ஜீமெயில் பற்றி ஆதியில் இருந்து கற்று தருவது அல்ல. ஜிமெயிலை இன்னும் எப்படி எளிதாக கையாளலாம் என்று சொல்வதற்கே இப்பதிவு.பல பொருத்தமான வினவலை(query) உபயோகிப்பதன் மூலம் ஜீமெயிலை முழுமையாக இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.

சரி பதிவுக்கு செல்வோமா....


1) இன்பாக்ஸ் அன் ரீட்(Unread) பிரச்சனை

பலர் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். சிலநேரம் நம்முடைய இன்பாக்ஸ் லேபிளை பார்க்கும் போது பல மடல்கள் வாசிக்கப்படாமல்(Unread) இருப்பது தெரியும். ஆனால் நமது மின்னஞ்சல் முகப்பில் தேடினாலும் பல மடல்களை காண முடியாது.



சரி இன்பாக்ஸ் லேபிளில் தெரியும் மடல்களை எளிதாக வசிப்பதற்கு வழிமுறை தான் என்ன?



மேலே காணப்படும் புகைப்படத்தில் கொடுத்துள்ளதை போன்று ஜிமெயில் முகப்பில் 'is:unread' என்ற வினவலை(Query) கொடுத்தால் வாசிக்கப்படாத மடல்கள் எல்லாம் முகப்பில் தெரியும்.

2. இணைப்பின்(Attachments) படி மடல்களை தேடுவது.

உங்கள் நண்பர்கள் யாராவது உங்களுக்கு புகைப்படங்களையோ, எம்பி 3 பாடல்களையோ மின் அஞ்சல் மூலம் அனுப்பி இருக்கலாம். அவை உங்களுக்கு தேவைப்படும்போது அவற்றை எப்படி விரைவாக தேடி எடுப்பது?

ஜிமெயில் முகப்பில் 'has:attachment' என்ற வினவலை(Query) கொடுத்தால் உங்களுக்கு வந்திருக்கின்ற இணைப்புகள் மட்டும் முகப்பில் தெரியும்.




சரி.. ஒரு நண்பரிடம் இருந்து வந்த இணைப்புகளை மட்டுமே தேடுவது எப்படி?

ஜிமெயில் முகப்பில் 'has:attachment;from:"email address"' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் உங்கள் நண்பர் உங்களுக்கு அனுப்பிய இணைப்பை மட்டும் தேடலாம்.



நீங்கள் அனுப்பிய இணைப்பை எப்படி தேடுவது?

ஜிமெயில் முகப்பில் 'has:attachment;from:"emailaddress";to:"emailaddress="' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிய இணைப்பை மட்டும் தேடலாம்.



3.கோப்புகளின்(file) படி மடல்களை தேடுவது

பொதுவாக பல்வேறு குழுமங்களில் நீங்கள் இருக்கும் போது உங்கள் ஜி மெயில் கணக்கானது மடல்களால் வெகு சீக்கிரம் நிரம்பி விட வாய்ப்புகள் இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இடத்தை அதிகமாய் பிடித்துக் கொள்ளும் கோப்புகளை நீங்கள் எளிதாய் தேடி அழித்துக் கொள்ளலாம்.

MP3 கோப்புகள் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் அதிக இடத்தை பிடித்துக்கொள்ளலாம். எனவே அதை எப்படி தேடுவது?
'filename:mp3' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் இருக்கிற MP3 பாடல்களை மட்டும் தேடிக்கொள்ளலாம்.



இப்படியாக எந்த கோப்பின் எக்ஸ்டன்சனையும்(Extension) சரியாக கொடுப்பதின் மூலம் அந்தந்த கோப்புகளை நீங்கள் எளிதில் தேடிக் கொள்ளலாம்.

உதாரணத்திற்கு

'filename:doc'
'filename:wmv'
'filename:pdf'
'filename:mov'

ஒரு குழுமத்திற்கு அனுப்பப்பட்ட பி.டி.எப் கோப்புகளை நீங்கள் ஏதாவது ஒரு லேபிளில் போட்டு வைத்திருக்கலாம். அவற்றை மட்டும் தேடுவது எப்படி?

'filename:pdf -label:"labelname"' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட லேபிளில் இருக்கும் பி.டி.எப். மடல்களை மட்டும் தேடிக் கொள்ளலாம்.



- தொடரும்

தொடர்புடைய பதிவு..

Monday, August 17, 2009

மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி - கூகிள் ஃபில்டர் ஒரு எளிய விளக்கம்


"மொக்கைகளிடம் இருந்து தப்பிப்பது எப்படி " - மொக்கை ராசாக்கள் தப்பா நினைக்காதீங்க, மின்னஞ்சலில் மொக்கைகள் போடுவதற்கும் ஒரு தனி திறன் வேண்டும்.... இது உங்களை குறை சொல்லும் பதிவு அல்ல....... மேலும் கணிப்பொறியிலும், மின்னஞ்சல் உலகிலும் அசர வைக்கும் அறிவை பெற்றிருக்கும் வல்லுனர்களும் இந்த பதிவை தவிர்க்க.. அப்புறம் உங்க டைம நான் வேஸ்ட் பண்ணிட்டேண்ணு சொல்லப்பிடாது ஆமா..

இணைய தளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும், மின்னஞ்சல் பயன் படுத்துபவர்களின் எண்ணிக்கையும் தினம் தினம் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.மின்னஞ்சல் சேவையை பல பன்னாட்டு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. கூகிள், யாஹூ,ரீடிஃப் போன்றவை மின்னஞ்சல் சேவை வழங்கி வரும் சில முக்கியமான நிறுவனங்கள் ஆகும். இந்த நிறுவங்களுக்குள் ஏற்படும் போட்டியை சமாளிக்க புது புது மின்னஞ்சல் வசதிகளை உபயோகிப்பவருக்கு கொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது "குருப்ஸ்(Groups)" எனப்படும் "குழுக்கள்" சேவை.

இன்றைய தேதியில் மட்டும் தமிழில் சுமார் 1300 குழுமங்கள் உள்ளன. நான் உட்பட நம்மில் பெரும்பாலானோர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட குழுமங்களில் உறுப்பினர்களாக இருக்கிறோம். குழுமங்கள் நமது எழுத்து திறமையை அதிகரிப்பதற்கும், கலந்துரையாடவும் ஒரு சிறந்த களமாக இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எண்ணற்ற குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் நண்பர்கள் தனக்கு தனி பட்ட முறையில் வரும் மின்னஞ்சல்களை தவற விடுவதும் இதில் வாடிக்கையாகி விடுகிறது. அவர்களுக்கு கூகுல் வடிகட்டி (Google Filters) ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.

கூகுல் வடி கட்டியை பயன்படுத்தும் முறை

1. நமது மின்னஞ்சலை திறந்து கொள்ளவும் (எ.கா. எனது மின்னஞ்சலின் முகப்பு இது. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல்களை வடி கட்ட வேண்டும்)


2. நாம் வடிகட்ட வேண்டிய குழுமத்தின் எதாவது ஒரு மின்னஞ்சலை திறந்து கொள்ளவும்.Reply(பதிலளி)என இருக்கும் பொத்தானுக்கு அடுத்து இருக்கும் பொத்தானை அழுத்தவும்.அதில் மூன்றாவதாக வரும் Filter Message like this (இது போன்ற வடி கட்டிய செய்திகள்)-ஐ சொடுக்கவும்(click).


3. இப்போது எப்படி நீங்கள் வடிகட்ட விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்யவும் (எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமததிற்கு வரும் எல்லா மின்னஞ்சலையும் வடிகட்ட வேண்டும்). நீங்கள் தேர்வு செய்த பின் Next Step (அடுத்தபடி) என்ற பொத்தானை சொடுக்கவும்.


4. இந்த பகுதியில் நீங்கள் அந்த குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சலை என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.(எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் மின்னஞ்சல் யாவும் இன்பாக்ஸ் செல்லாமல் புதிய லேபில் உள்ளே செல்ல வேண்டும்.)


5. நீங்கள் வடி கட்ட விரும்பிய குழுமத்திற்கு இடும் புதிய லெபில்-ஐ இங்கே கொடுக்கவும். (எ.கா. நான் எனது புதிய லேபிழுக்கு 'sx' என பெயர் வைத்துள்ளேன்)


6. இப்போது நீங்கள் Create Filter(வடிப்பானை உருவாக்கு) என இருக்கும் பொத்தானை சொடுக்கும் பட்சத்தில் உங்களுக்கு ஒரு புதிய லேபில் உருவாவதுடன், நீங்கள் குறிப்பிடும் குழுமத்திற்கு வரும் மின்னஞ்சல் யாவும் அந்த லேபிழுக்குள் தானாகவே போய் விடும்.( எ.கா. எனக்கு sxcce_it2005 என்ற குழுமத்தில் இருந்து வரும் எல்லா மின்னஞ்சல்களும் இப்போது இன்பாக்ஸ் போகாமல், sx என்ற லேபிழுக்குள் போய் விடும். create filter என்ற போத்தானுக்கு வலப்புறமாக இருக்கும் வெளியை டிக் செய்யும் பட்சத்தில் ஏற்கனவே அந்த குழுமத்தில் இருந்து வந்த எல்லா மின்னஞ்சல்களும் sx என்ற லேபலுக்குள் போய் விடும்.)


7. நிறைய குழுமங்களும், நிறைய லேபல்களும் இருக்கும் பட்சத்தில் உங்கள் மின்னஞ்சல் முகப்பின் இடது ஓரம் இது போல் காட்சி தரும்.


Google Filters குறித்த உங்கள் சந்தேகங்களை stalinfelix2000@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் மின்னஞ்சல் செய்யலாம்.. மேலும் விமர்சனங்களே ஒரு எழுத்தாளனை உருவாக்கும்... உங்கள் விமர்சனங்களை இங்கே பதிவு செய்யவும்