இந்த பதிவு ஜீமெயில் பற்றி ஆதியில் இருந்து கற்று தருவது அல்ல. ஜிமெயிலை இன்னும் எப்படி எளிதாக கையாளலாம் என்று சொல்வதற்கே இப்பதிவு.பல பொருத்தமான வினவலை(query) உபயோகிப்பதன் மூலம் ஜீமெயிலை முழுமையாக இன்னும் சிறப்பாக பயன்படுத்த முடியும்.
சரி பதிவுக்கு செல்வோமா....
1) இன்பாக்ஸ் அன் ரீட்(Unread) பிரச்சனை
பலர் எதிர்கொள்ளும் பிரச்சனை தான். சிலநேரம் நம்முடைய இன்பாக்ஸ் லேபிளை பார்க்கும் போது பல மடல்கள் வாசிக்கப்படாமல்(Unread) இருப்பது தெரியும். ஆனால் நமது மின்னஞ்சல் முகப்பில் தேடினாலும் பல மடல்களை காண முடியாது.
சரி இன்பாக்ஸ் லேபிளில் தெரியும் மடல்களை எளிதாக வசிப்பதற்கு வழிமுறை தான் என்ன?
மேலே காணப்படும் புகைப்படத்தில் கொடுத்துள்ளதை போன்று ஜிமெயில் முகப்பில் 'is:unread' என்ற வினவலை(Query) கொடுத்தால் வாசிக்கப்படாத மடல்கள் எல்லாம் முகப்பில் தெரியும்.
2. இணைப்பின்(Attachments) படி மடல்களை தேடுவது.
உங்கள் நண்பர்கள் யாராவது உங்களுக்கு புகைப்படங்களையோ, எம்பி 3 பாடல்களையோ மின் அஞ்சல் மூலம் அனுப்பி இருக்கலாம். அவை உங்களுக்கு தேவைப்படும்போது அவற்றை எப்படி விரைவாக தேடி எடுப்பது?
ஜிமெயில் முகப்பில் 'has:attachment' என்ற வினவலை(Query) கொடுத்தால் உங்களுக்கு வந்திருக்கின்ற இணைப்புகள் மட்டும் முகப்பில் தெரியும்.
சரி.. ஒரு நண்பரிடம் இருந்து வந்த இணைப்புகளை மட்டுமே தேடுவது எப்படி?
ஜிமெயில் முகப்பில் 'has:attachment;from:"email address"' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் உங்கள் நண்பர் உங்களுக்கு அனுப்பிய இணைப்பை மட்டும் தேடலாம்.
நீங்கள் அனுப்பிய இணைப்பை எப்படி தேடுவது?
ஜிமெயில் முகப்பில் 'has:attachment;from:"emailaddress";to:"emailaddress="' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பருக்கு அனுப்பிய இணைப்பை மட்டும் தேடலாம்.
3.கோப்புகளின்(file) படி மடல்களை தேடுவது
பொதுவாக பல்வேறு குழுமங்களில் நீங்கள் இருக்கும் போது உங்கள் ஜி மெயில் கணக்கானது மடல்களால் வெகு சீக்கிரம் நிரம்பி விட வாய்ப்புகள் இருக்கின்றது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இடத்தை அதிகமாய் பிடித்துக் கொள்ளும் கோப்புகளை நீங்கள் எளிதாய் தேடி அழித்துக் கொள்ளலாம்.
MP3 கோப்புகள் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் அதிக இடத்தை பிடித்துக்கொள்ளலாம். எனவே அதை எப்படி தேடுவது?
'filename:mp3' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் உங்கள் மின்னஞ்சல் கணக்கில் இருக்கிற MP3 பாடல்களை மட்டும் தேடிக்கொள்ளலாம்.
இப்படியாக எந்த கோப்பின் எக்ஸ்டன்சனையும்(Extension) சரியாக கொடுப்பதின் மூலம் அந்தந்த கோப்புகளை நீங்கள் எளிதில் தேடிக் கொள்ளலாம்.
உதாரணத்திற்கு
'filename:doc'
'filename:wmv'
'filename:pdf'
'filename:mov'
ஒரு குழுமத்திற்கு அனுப்பப்பட்ட பி.டி.எப் கோப்புகளை நீங்கள் ஏதாவது ஒரு லேபிளில் போட்டு வைத்திருக்கலாம். அவற்றை மட்டும் தேடுவது எப்படி?
'filename:pdf -label:"labelname"' என்ற வினவலை(Query) கொடுப்பதன் மூலம் அந்த குறிப்பிட்ட லேபிளில் இருக்கும் பி.டி.எப். மடல்களை மட்டும் தேடிக் கொள்ளலாம்.
- தொடரும்
தொடர்புடைய பதிவு..
Super.. very useful info. thks a lot
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
ReplyDeletethanks, useful info, will the same comments work in yahoo, hotmail mails too
ReplyDeleteவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி யோஹன்னா யாழினி,அப்துல்மாலிக்,ராம்ஜி_யாஹூ
ReplyDelete//thanks, useful info, will the same comments work in yahoo, hotmail mails too //
ReplyDeleteDear Ramji,
It's only specific to gmail.
அவசரத்தில் அண்டவுக்குள் தலையை நுழைக்க முடியாத நிலையில் எல்லோருக்கும் வரும் ...அந்த நிலையை தவிர்க்க உங்கள் பதிவு பயன் உள்ளது
ReplyDeleteஅவசரத்தில் அண்டவுக்குள் தலையை நுழைக்க முடியாத நிலையில் எல்லோருக்கும் வரும் ...அந்த நிலையை தவிர்க்க உங்கள் பதிவு பயன் உள்ளது
ReplyDeleteஅண்ணாச்சி நன்றிகள்...
ReplyDeleteநன்றிகள் பல.............. தோழரே
ReplyDeleteannachi:
ReplyDelete"Google apps mail hosting" ippo lotus notesa muzhusa vilunga poguthu ........ antha pakkam pogumpothu enakkum thagaval sollitu ponga ....
*-*-*-* அட போப்பா... 'நாங்க பத்து வருசமா ஜீமெயிலை உபயோகிக்கிறோம்.... எங்களுக்கு தெரியாததா!?' என சொல்பவர்கள் பின் வாங்கி கொள்ளலாம்.*-*-*-* பின் வாங்கினேன் சரி படித்துதான் பார்ப்போமே என்று படித்தேன் trail error முறையில் நான் கற்று கொண்டேன் சில வருடங்களுக்கு முன்பே ... அவ்வவ்போது உபயோக படுத்தியும் வருகிறேன் பகிர்தலுக்கு நன்றி,,,
ReplyDeleteUseful info. thank u nanba...
ReplyDeleteவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஓவியம்,கிருபா, ஷண்முக சுந்தரம்
ReplyDeleteThanks Hp's
ReplyDeleteஅருமை!
ReplyDeleteநல்ல பதிவு நண்பரே. வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி கவிதைகள், கானகம்
ReplyDeleteநன்றி திரு ஸ் பெ.உபயோகமான தகவல்கள்.நான் தேடும் முறை இவ்வளவு கச்சிதமாக வந்ததில்லை.மீண்டும் நன்றி.
ReplyDeletegood one. thanks a lot to make things simple :)
ReplyDeletegood post. thanks a lot to make things simple:)
ReplyDeleteதேடுவதில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேற்பட்ட அட்டாச்மென்ட்களைக் கொண்ட மடல்களை மட்டும் தேடி எடுக்க வாய்ப்பிருக்கிறதா? உதாரணத்துக்கு: Has attachment higher than 5 MB... இதுபோல. வழியிருந்தால் 70 சதம் நிறைந்திருக்கும் என் கணக்கின் அளவைக் குறைத்துக் கொள்வேன். நன்றி.
ReplyDeletepayanulla vivaram
ReplyDeletereality in simplicity
ReplyDeletereality
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
ReplyDelete